கச்சா எண்ணெயின் விலை மீண்டும் அதிகரிப்பு!

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை மீண்டும் அதிகரித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. குறிப்பாக ஒரு பீப்பாய் கச்சா எண்ணெய்யின் விலை 72.37 டொலராக காணப்பட்டிருந்த நிலையில் நேற்று முதல் 75 டொலராக அதிகரித்துள்ளது. அத்துடன் நேற்றுமுன்தினமும் ஒரு பீப்பாய் கச்சா எண்ணெய் 72.37 டொலராகவே பதிவாகியிருந்தது. எனினும் இந்த வாரத்தின் ஆரம்பத்தில் சர்வதேச சந்தையில், கச்சா எண்ணெய்யின் விலை 79 அமெரிக்க டொலராக பதிவாகியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.